அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராசன் முன்னெடுப்பில் எழில்மிகு விழா !

Published Date: April 19, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி ராஜன் 'வாழ்வே வரலாறு' நூல் வெளியீட்டு விழா 22.4.2025 -செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்புரையாற்றினார்.

கழகத் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சி.டி செல்வம் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் 'இந்து' என். ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் நன்றி கூறினார். 

அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராசன் வேண்டுகோள்!

இவ்விழாவினை சிறப்புற ஏற்பாடு செய்து நடத்திடும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராசன், "ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் முதலமைச்சர் ஆகவும், நீதி கட்சியின் இறுதித் தலைவராகவும் இருந்த எங்கள் தாத்தா திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் 'வாழ்வே வரலாறு'என்னும் இந்த வரலாற்றுக் கருவூலத்தை அச்சு வடிவில் வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் இசைவுதந்திருப்பது பெரும் மன நெகிழ்வைத் தருகிறது என்றும், என்னுள் வாழ்கின்ற எனது தந்தையார் பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும் இத்தருணத்தில் இருந்திருந்தால் மிக்க மகிழ்வடைந்திருப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை.

எனது மூதாதையரின் புகழ் வாழ்வை போற்றும் கடமையை இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன் என்கின்ற உணர்ச்சி பெருக்கோடு இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை எல்லாம் அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." 

-எனக் குறிப்பிட்டுள்ளார்.

Media: Murasoli